முனைவர் நாசுலோசனா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முனைவர் நாசுலோசனா
இடம்:  சிவகாசி, சென்னை, தமிழ்நாடு
பிறந்த தேதி :  28-Jun-1975
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Oct-2016
பார்த்தவர்கள்:  251
புள்ளி:  2

என்னைப் பற்றி...

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறேன்.

என் படைப்புகள்
முனைவர் நாசுலோசனா செய்திகள்
முனைவர் நாசுலோசனா - சுசுபாஸன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2017 11:57 pm

மோதகம்

மேலும்

மோ+தகம்---மோதகம். மோதகம் (கொலுக்கட்டை) மோ என்பது முன்னிலை அசைச்சொல். தகம் என்பது உஷ்ணம், சூடு என்ற பொருளைத் தருகிறது. அதாவது சூட்டில் ஆவியில் வேகவைப்பது கொலுக்கட்டை. 04-Oct-2017 8:49 pm
மோது + அகம் 24-Sep-2017 6:28 pm
மோத் + அகம் 24-Sep-2017 1:44 pm
முனைவர் நாசுலோசனா - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Oct-2017 6:26 pm

மடம் என்றால் என்ன? பொருள் தருக

மேலும்

மடத்தில் கட்டணமில்லாமல் சாப்பிடலாம்; தங்கலாம் ! 12-Oct-2017 1:32 am
இடம் ! சத்திரம், மடம் எல்லாம் ஒரே இடம் ! 12-Oct-2017 1:29 am
மடம் என்றால் பேதமை என்று பொருள். அதாவது அறியாமையைக் குறிப்பிடுவது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு. 04-Oct-2017 8:26 pm
முனைவர் நாசுலோசனா - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Oct-2017 6:27 pm

இலவசம் வேறு பெயர்கள் என்ன?

மேலும்

தானம் 10-Nov-2017 10:21 am
இனாம், தட்சணை,காணிக்கை, பரிசு , கொடை. 22-Oct-2017 4:01 pm
ஓசி ! சும்மா கொடுப்பது ! 12-Oct-2017 1:26 am
இலவயம், விலையில்லாதது. 04-Oct-2017 8:11 pm
முனைவர் நாசுலோசனா - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2017 10:01 am

இன்றைய மாணவர்களுக்கு தமிழ் மொழியில் ஆர்வம் குறைந்துள்ளதா?

மேலும்

ஆட்சியாளர்கள், பெற்றோர்களுக்கே குறைந்துவிட்டதே! மாணவர்களுக்குக் குறையாமல் இருக்குமா? ஆனால், மொத்தத்தில் குறைந்தாலும், நேசிப்பவர்கள் நேசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 29-Nov-2017 4:30 am
Illai 24-Oct-2017 8:55 pm
ஆம் 05-Oct-2017 5:58 pm
நாம் ஆங்கில மொழி மோகத்தால் தாய் மொழியாகிய தமிழயை இழந்து வருகிரோம். 04-Oct-2017 1:46 pm
முனைவர் நாசுலோசனா - vaishu அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
25-Oct-2016 3:24 pm

பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் இந்த வார்த்தைகளுக்கு இடையேயான வேறுபாடுகள் என்னென்ன?

மேலும்

கலாச்சாரத்திற்குரிய தமிழாக்கம் தான் பண்பாடு ஆகும். நாகரிகம் என்பது அறம், பொருள், இன்பம்கண் உடையது. நஞ்சும் உண்பர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் எனும் புறநானூற்று அடியிலுள்ள நாகரிகம் என்பது நட்பின் ஆழத்திற்கும், நம்பிக்கைக்கும் சொல்வது. நாகரிகம் என்பது கால்த்திற்கேற்ப மாறக்கூடியது. பண்பாடு என்பது மாறாதது. ஒருவனுக்கு ஒருத்தி என்பது பண்பாடு. பாடறிந்து ஒழுகுதலாகும். நாகரிகம் என்பது கொள்கையைப் போல மாற்றத்திற்குரியது. பண்பாடு என்பது கோட்பாடுபோல மாறாதது. 26-Oct-2016 11:07 pm
கலாச்சாரம் என்ற மணிப்பிரவாள சொல்லிற்கு நிகரான தமிழ்ச் சொல் பண்பாடு . நிலத்தை பண்படுத்துதல் போன்று மனிதனை மனித மனத்தினை பண்படுத்தும் வளப் படுத்தும் காரணப் பெயராக உருவாக்கப் பட்டிருக்கலாம் . நஞ்சும் உண்பர் நயத்தக்க நாகரீகர் என்று பழைய தமிழ் வரியுண்டு. மேம்பட்ட மனித இயல்பை குறிக்கும் சொல். இதுவும் மணிப்பிரவாளச் சொல் என்று கருதுகிறேன் மணிப்பிரவாளம் தற்சம தற்பவ விதிகளுக்குட்பட்டு தமிழில் கலந்த வடமொழிச் சொற்கள் .வைணவ இலக்கியங்களில் இவைகள் மிகுந்து காணப்படும். அன்றாட வாழ்க்கையிலும் இவைகள் நிரம்பப் பயன்பாட்டில் உள்ளன . சிறப்பான கேள்வி அன்புடன்,கவின் சாரலன் 26-Oct-2016 9:43 am
முனைவர் நாசுலோசனா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2016 10:19 pm

என்
இதயக் கமலத்தில்
ரோஜாவை
நட்டு வைத்தாய்!

அன்பிலும் பாசத்திலும்
பூத்துக் குலுங்கியது
ரோஜா மட்டுமல்ல
என்
இதயக் கமலமும்தான்...

ரோஜாக்களைப்
பறிக்க வந்தவன்
பறித்தது
ரோஜாக்களை அல்ல....
வளர்ந்து
பூத்துக் குலுங்கிய
ரோஜாச் செடியை....!

மேலும்

தொடக்கத்தை தேடி முடிவை பெறுகிறது வாழ்க்கையில் பல கதைகள் 01-Nov-2016 7:51 am
முனைவர் நாசுலோசனா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2016 10:01 pm

பொன் நகை
வேண்டாம்
புன்னகை மட்டும்
போதுமென்றார்கள்!

எல்லோரும்
தலையாட்டினார்கள்
நானும்
ஆட்டினேன் தலையை....

ஒரு நாள்
தலை அசைத்தற்காக
காலமெல்லாம் கிடைக்கவில்லை.
புன்னகையும் பொன்நகையும்.....

கைத்தடியுடன் இருக்கிறேன்
நானும் எதிர்பார்ப்புடன்
புன்னகைக்காக.....

திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயக்கப்படவில்லை
சொர்ணத்தில்
நிச்சயக்கப்படுகின்றன
திரும்பிப் பார்க்க வைக்கிறது
என்னை மீண்டும் ......

மேலும்

கடந்து சென்ற நினைவுகளின் பாதி நிகழும் அதிகாரத்தின் மீதிகளே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2016 7:45 am

சென்ற வாரம் கவிஞர் எழில்வேந்தன் அவர்களின் “மங்கையராகப் பிறப்பதற்கு” எனும் கவிதை படித்தேன். அது 2002 இல்  தாமரையிலும் ஆறாம் திணை.காமிலும்   வெளிவந்த கவிதை. என் எண்ணத்தில் உதித்தவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.  

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே